இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும் பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும் செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் என்ற அளவில் வீதி விபத்துக்களால் இறப்புகள் பதிவாகின்றன.
அடுத்த ஆண்டு முதல் பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன என்றும்.
ஜூன் முதல் பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சிறந்த ஓட்டுநர் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதற்குமாகஇந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.






3 Comments