மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவிக்கையில்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணைக்குழு அந்தச் செயல்பாட்டில் ஒரு பகுதியாக இருக்கும் என்றும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதோடு.
தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணய செயல்முறை முடிக்கப்பட வேண்டும் அல்லது பழைய முறையின் கீழ் தேர்தல்களை நடத்த அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும்.
இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் அரசாங்கம் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் ஆனால் அவர்கள் இன்னும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.






3 Comments