சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மின்சார உபகரணங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
3 பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வணிகர்களுக்கான சிவப்பு பாதை வழியாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவமானது, இன்று (20.05.2024) இடம்பெற்றுள்ளது.
கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 18 வயது மகளும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்கள் தாய்லாந்தில் பெற்று, மின்சார சமையல் சாதனங்களில் மறைத்து வைத்து, இந்தியாவின் சென்னைக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments