Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சடங்கு வீட்டிற்குச் சென்ற யுவதி மாயம் !

களுத்துறை - மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வெலிபென்ன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்க பெற்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது பாட்டியுடன் இறுதிச் சடங்கு வீடொன்றுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பாட்டியும் யுவதியும் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் யுவதி பல்பொருள் அங்காடிக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்துள்ளார்.

பல்பொருள் அங்காடிக்குள் சென்ற பாட்டி பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது யுவதி காணாமல்போயுள்ளதை அறிந்தனர்.

இதனையடுத்து பாட்டி காணாமல்போன யுவதியை பல இடங்களில் தேடியுள்ள நிலையில் யுவதியை கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் வீடு திரும்பி இது தொடர்பில் யுவதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் யுவதியின் பெற்றோர் இது தொடர்பில் யுவதியை திருமணம் முடிக்கவிருந்த இளைஞனிடம் கூறியுள்ளனர்.

இதன்போது அந்த இளைஞன், காணாமல்போன யுவதி தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரு பெண்களுடன் களுத்துறை பகுதிக்குச் செல்வதாகவும் மாலை நேரத்தில் அளுத்கம கடற்கரை பகுதிக்கு வருமாறு தன்னிடம் கூறியதாக யுவதியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மேலும் யுவதியின் பெற்றோர் இது தொடர்பில் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யுவதியுடன் சென்ற இரண்டு பெண்கள் குறித்து எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் யுவதியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடங்கு வீட்டிற்குச் சென்ற யுவதி மாயம் !

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...