Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கைகள் கட்டாயம்!

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு Â அறிவித்துள்ளது.

நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மேலும் 100 கிலோமீற்றருக்கு அதிக தூரம் பயணம் செய்யும் அனைத்து பேருந்துகளும் இந்த அறிக்கையைப் பெற்று கொள்ள Â வேண்டும்.

அதன்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பொறியியல் அறிக்கையைப் பெறுவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று 21 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட, ஜூலை முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளில் பொருத்தப்படும் மேலதிக சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...