Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

செவிலியர்களுக்கு நியமனக் கடிதங்கள் நாளை!

இலங்கையில் செவிலியர் சேவைக்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை Â நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கையின் செவிலியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் இந்த நிகழ்ச்சியுடன் செவிலியர் சேவையில் சிறப்பு தரத்தில் உள்ள 79 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை காலை 9:30 மணிக்கு அலறி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நாலிந்த ஜயதிஸ்ஸ சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...