நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா ஊடாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று 23 நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments