Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கைதான பிரித்தானிய யுவதி!

இலங்கையில் கடந்த வாரம் அதிகளவு போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதி,டான் என்பவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த டான் என்பவரே, தமது பொதிகளில் போதைப்பொருட்களை பொதியிட்டிருக்கவேண்டும் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதல் இரவு தாம் தமது உடமைகளை பொதியிட்டு, நித்திரைக்கு சென்ற பின்னர், அடுத்த நாள் காலையில், பொதிகளை பரிசோதிக்கவில்லை என்றும் அவர் விசாரணையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 46 கிலோ கிராம் நிறை கொண்ட குஸ் ரக போதைப்பொருளை எடுத்து வந்ததாக தெரிவித்தே பிரித்தானிய யுவதியான சார்லோட் மே லீ அண்மையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் தான் நிரபராதி என்று வலியுறுத்தும் அவர், டான் என்று அழைக்கப்படுபவர், இலங்கையில் விடுமுறைக்காக தன்னுடன் இணைந்துக்கொள்வதாக உறுதியளித்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு லண்டனை சேர்ந்த லீ, அவரது தொலைபேசி எண் அல்லது குடும்ப விபரங்களை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அவர் இலங்கைக்கு பயணித்தாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், இதற்கு முன்னர் இலங்கைக்கு தாம் செல்லவில்லை எனவும் லீ கூறியுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...