2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக தெரியவருகின்றது .
இத்தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) குறிப்பிட்டுள்ளது .
மே மாதம் 25 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,006,097 ஆக பதிவாகியிருகின்றது.
மேலும், மே மாதத்தில் மே 25 வரை மேலும் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.






3 Comments