Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சித்திரவதைகளுக்கு இனி இடமில்லை!

பாடசாலைகளில் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இனியும் இடமளிக்கக்கூடாதெனவும் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி Â உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கூரியுள்ளார்.

பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும் இலங்கை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளதோடு.
குறித்த பொறுப்பு அரசிற்கும் பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியதோடு.

அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும்.

எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர் எனவும்.

இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...