Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கெஹெலிய ரம்புக்வெல்லவின் திருட்டுத்தனம் அம்பலம்!

தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட அனைத்துப் பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் அனுஜா லக்மாலியிடம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தெரிவித்தபோது தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் திருமதி அமலி ரம்புக்வெல்ல எடுத்துக் கொண்டதாக பண்டார பஸ்நாயக்க கூறியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கூறியுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய 2021/2023 காலகட்டத்தில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக 15 பேரை நியமித்துள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அவரது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தி இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவ்வாறு கூறியது.
Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...