போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் போலந்தின் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இராஜதந்திர உறவுகளை ஆழப்படுத்துவதும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பை ஆராய்வதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.






3 Comments