Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சமஷ்டி தீர்வே தமிழர்களின் எதிர்பார்ப்பு - சிவஞானம் சிறீதரன்

“ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும் இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய தூதுவருடன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பில் இதன்போது ஆஸ்தரேலிய தூதுவரிடம் கவனத்துக்கு சிறிதரன் எம்.பி. கொண்டுவந்தார்.

அரசியல் தீர்வு பற்றியும் பேசப்பட்டுள்ளது. சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக ஆஸ்திரேலியாவின் அழுத்தங்கள் தொடரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

காணிப்பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...