இலங்கையின் பொருளாதாரம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட நிலைக்குத் திரும்புவதற்கு மேலும் 3 ஆண்டுகள் செல்லும் என இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.ÂÂ
இலங்கையின் பொருளாதாரம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் மேலதிக ஆளுநர் சந்திரநாத் அமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2024ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளதென அவர் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலான வேறுபாடு காணப்படுகிறது எனவும் வெவ்வேறு காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்.ÂÂ
தற்போது பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையின் பயன் மக்களைச் சென்றடைகிறது எனவும்.
இலங்கை மத்திய வங்கியின் மேலதிக ஆளுநர் சந்திரநாத் அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.






3 Comments