Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

செம்மணி புதைகுழி தொடர்பில் அநுர தரப்பின் அறிவிப்பு!

அரியாலை - செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தப் புதைகுழியில் இருந்து புதைகுழியை தொடர்ச்சியாக அகழ வேண்டும் என்று அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சின் ஊடாக நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான் அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

அதேசமயம் இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகிறன எனவும்.

இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...