பல விசேட தொடருந்து சேவைகளை இயக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு.
பொசன் விழாவை முன்னிட்டு இந்த விசேட தொடருந்து சேவைகள் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறியுள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 தொடருந்து பயணங்களும் அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 தொடருந்து பயணங்களும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு.
அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் முழு நிதி ஆதரவுடன் இயக்கப்படுவதால் இந்த அனைத்து தொடருந்து பயணங்களும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வசதிகளை தொடருந்து நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தொடருந்து பொது முகாமையாளர் கூறியுள்ளார்.






3 Comments