தண்டனைச் சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
உடலியல் தண்டனை மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள துன்புறுத்தல் அதிகரித்திருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு.
எந்தவொரு துறையிலும் உடல் தண்டனை மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாவதனை தடை செய்தல் மற்றும் உடல் துன்புறுத்தலுக்காகத் தண்டனை விதிப்பதற்கான ஏற்பாடுகளை விதிப்பதற்காகத் தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்தம் செய்வதற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில்.
ஏற்புடைய பணிகளுக்கு சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் அதற்கமைய செயற்பட முடியவில்லை எனவும்.
குறித்த சட்டமூலத்தை துரிதமாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments