கினிகத்தேன தியகல ஊடாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து சிவனொளிபாதமலை வரையிலான வீதியில் பாலம் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால் பராமரிப்பு பணிகளுக்காக 10 நாட்களுக்கு வீதி மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூன் 24 ஆம் திகதி வரை குறித்த வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு.
இவ்வீதியின் லொனக் தோட்ட பகுதியில் களனி கங்கைக்கு நீர் பாயும் கால்வாயின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாலும் புதிய பாலம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில்.
இந்தப் பாலம் 4 ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலம் முற்றிலுமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் கூயுள்ளனர்.
வீதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கொழும்பிலிருந்து பயணிக்கும் சாரதிகள் கலுகல, பொல்பிட்டிய, லக்ஷபான ஊடாக நோட்டன் பிரிட்ஜ் வீதி மற்றும் ஹட்டன் - நோர்டன் பிரிட்ஜ் வீதியைப் பயன்படுத்துமாறு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments