கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று குளவிகளால் தாக்கப்பட்டதாகவும் 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி இ.எஸ்.கே. ஜெயசூரியா கூறியுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு கீழுள்ள பொகவந்தலாவ தோட்டத்தில் இன்று தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து குளவிகள் கலைந்து கொட்டியுள்ளதாகவும்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளதோடு தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால் தேயிலை கொழுந்து பறிப்பதை நிர்வாகம் இன்று நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments