டெங்கு நோயினால் கடந்த ஆண்டில் மாத்திரம் நாட்டில் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறியுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 26,775 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு.
தங்களது குடியிருப்புகள் மாத்திரமன்றி பணியிடங்கள், மதஸ்தலங்கள் மற்றும் தங்களது பிள்ளைகள் செல்லும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுமாயின் அது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளதோடு.
வாரத்திற்கு ஒருமுறையேனும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி டெங்கு நுளம்புகள் பரவுவதனை கட்டுப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.






3 Comments