Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

குளியலறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு சிசுவின் சடலம் மீட்பு!

புத்தளம் மருத்துவமனையில் பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறையின் குளியலறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய இளம் யுவதி ஒருவரை புத்தளம் காவல்துறையினர் கைது கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யுவதி புத்தளம் பகுதியில் உள்ள ஒரு மசாய்ச் நிலையத்தில் தொழில் புரியும் ஆணவாசல் பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் தகவல்படி கைது செய்யப்பட்ட யுவதி புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது யாருக்கும் தெரியாமல் இரகசியமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை குளியலறையில் வீசியுள்ளார் இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அறைக்குப் பொறுப்பான தாதியர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் காவல்துறையினரின் பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மரணம் குறித்து புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

புத்தளம் காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...