Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய திசையில் கவனம் செலுத்துகிறேன் – ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டில் இலங்கை 4,669 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது.

2025 முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 90% அதிகரிப்பு:

இலங்கை முதலீட்டுச் சபை 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் ஐ.அ.டொலர்களால் வெற்றிகரமாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு முதலீடு 21 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது என்றும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை 4,669 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டு முன்மொழிவுகளை இலங்கை ஈர்த்துள்ளது. நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான உத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முதலீட்டு சபை முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாரம்பரிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், எனவே முதலீட்டுக்கான புதிய துறைகளை நாடு அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...