Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தமிழர்கள் கொல்லப்பட்டதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் பார்க்கவேண்டும்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆயுத மோதல்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விகிதம் முந்தைய ஆண்டை விட 25% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும், 41,370 கடுமையான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டில், மோதல் இடம்பெறும் நாடுகளில் 4,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 7,000 க்கும் குழந்தைகள் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

" சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்களின் குழந்தை பருவத்தை அனுபவிக்கவேண்டிய வயதில் தோட்டாக்களுக்கும் குண்டுகளுக்கும் மத்தியில் எப்படி உயிர்வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும், அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களும், "இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. குழந்தைகளுக்கு எதிரான கொடுமையில் நாம் மீள முடியாத கட்டத்தில் இருக்கிறோம்," என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள்.


உலகெங்கிலும் உள்ள 20 மோதல் மண்டலங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இந்த அட்டூழியங்களை ஐ.நா. அறிக்கை பட்டியல் இட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தொடரும் காசா பகுதியில் உள்ள குழந்தைகள் மிக அதிக வன்முறையை எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், பாலஸ்தீனத்தில் 8,500 குழந்தைகள் கடுமையான வன்முறையை அனுபவித்துள்ளனர்.

லெபனானில் இஸ்ரேல் செய்த அட்டூழியங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் வன்முறை குறித்தும் அறிக்கை வருத்தம் தெரிவிக்கிறது.

கொலை, பாலியல் வன்கொடுமை, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என மொத்தம் 41,370 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாலஸ்தீன பிரதேசங்களில் இஸ்ரேலால் செய்யப்பட்டவை. இதன் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இஸ்ரேல் "கறுப்புப் பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் இஸ்ரேலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலஸ்தீன அமைப்புகளும் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. பாலஸ்தீனத்திற்குப் பிறகு, காங்கோ, சோமாலியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி போன்ற நாடுகளிலும் அதிக வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அறிக்கை, குழந்தைகளின் எதிர்காலம் குறித்து உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான செய்தியைத் தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர, நாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த குழந்தைகள் ஒரு பாதுகாப்பான, அமைதியான உலகத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...