இலங்கையில் டெங்கு நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை 15 டெங்கு தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூயுள்ளது 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தமாக 27,702 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு.
மேல் மாகாணம் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது எனவும் 4,702 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் தற்போது வாரத்திற்கு சுமார் 1,300 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அதிகாரிகள் ஒரு விரிவான நாடு தழுவிய நுளம்பு ஒழிப்பு இயக்கத்தை தொடங்கவுள்ள நிலையில்.
இந்த தீவிர நிகழ்ச்சித் திட்டம் ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை செயல்படுத்தப்படும் எனவும் இது இலங்கை முழுவதும் உள்ள 16 மாவட்டங்களில் 101 மருத்துவ அதிகாரி சுகாதார பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு நுளம்பு இனப்பெருக்க இடங்களை இலக்காகக் கொண்டு நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்பதும் குரூப்பிடத்தக்கது.






3 Comments