இருவருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் புளத்சிங்கள ஹல்வதுர, எபிடவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளதோடு
புளத்சிங்கள ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த மானகே சமன் பாலித (வயது 50) என்பவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும்.
தாக்குதல் நடத்தியவர் 23 வயதுடையவர் என்றும் இறந்தவரின் உறவினரை மணந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






3 Comments