போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இந்த இருவரும் அபுதாபி ஊடாக இத்தாலிக்குச் செல்ல எத்திஹாட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படவிருந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
போலி கடவுச்சீட்டுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதையும் மனிதக் கடத்தல் அல்லது ஆவண மோசடியில் ஈடுபட்டுள்ள ஏதேனும் பெரிய வலைப்பின்னல்கள் குறித்தும் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குயிப்பிடத்தக்கது.






3 Comments