நேற்று நாரஹேன்பிட்டியில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 65வது மருந்தகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நாட்டிலுள்ள 130 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகள், அத்துடன் பிரபலமான தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகிலும் இந்த அரச மருந்தகங்கள் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகள் அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தர ஆய்வகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி ஏழு முறை பரிசோதிக்கப்பட்ட பின்னரே சந்தைக்கு விடப்படுவதால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருந்து கொள்முதல் நடைமுறைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார் 2024 ஆம் ஆண்டு முழுவதும் 68 டெண்டர்கள் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 268 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் கொள்முதல் செயல்முறை குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு உயர்தர மருந்துகள் முறையாக வழங்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கங்களுக்கு இடையே மருந்து கொள்முதல் தொடர்பான விசேட திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார் இது நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments