நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி - கற்பிட்டி வீதியில், தலுவ 6வது மைல் கல் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் பேருந்து ஒன்று சாலையின் இடதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது பேருந்தில் இருந்து இறங்கி அதன் பின்னால் காத்திருந்த 15 மற்றும் 74 வயதுடைய ஜா-எல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த இருவர் மீது, பாலாவி திசையிலிருந்து கற்பிட்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று மோதியது இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
அதேநேரம் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் A-09 வீதியில் உள்ள புதுக்குளம் சந்திப் பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலதுபுறம் திரும்பியபோது, அதே திசையில் வந்த பேருந்துடன் மோதியது இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த இரண்டு பயணிகளும் படுகாயமடைந்தனர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நெடுங்கேணியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன் வெல்லவாய வீதியில் 6வது மைல் கல் அருகே வளைவில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பண்டாரவளை,l துங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றுடன்,ஹோமாகம பொலிஸ் பிரிவின் ஹைலெவல் வீதியில் உள்ள பிடிபன சந்தியில், கிளை வீதியிலிருந்து ஹைலெவல் வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மாவத்கம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments