சித்துபாத்தி புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை முழுமையாக 33 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சில இடங்களில் பல மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படுவதால், எலும்புக் கூடுகளின் சரியான எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் சிரமம் இருப்பதாக, பாதிக்கப்பட்டோர் தரப்புச் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
எலும்புக் கூடுகளுடன் சேர்த்து, ஒரு புத்தகப்பை, ஒரு பொம்மை மற்றும் ஒரு சிறுவர் காலணியும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் செம்மணி மற்றும் சித்துபாத்தி புதைகுழி வழக்குகளை ஒன்றாக இணைப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் இதை முன்னெடுப்பது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments