ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த அடையாளந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பாதாள உலக குழு உறுப்பினரான “ ஆர்மி உபுல்” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"ஆர்மி உபுல்" என்பவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட, பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய நண்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments