இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பில் சில தொடருந்து நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை தொகுதிகளில் உள்ள கோளாறு காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரும் தொடருந்து விபத்துகள் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே சங்க பிரதிநிதிகள் இவ்வாறு கூறியுள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்சென்ற தொடருந்து, ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டு சமிக்ஞை கோளாறு காரணமாக பெரும் சிக்கலை எதிர்கொண்டதாகவும்.
தொடருந்து சமிக்ஞை கோளாறுகளை நிவர்த்திக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொடருந்து விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.






3 Comments