நிலையத்திற்குள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஏலக்காயை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்ற நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்திறங்கிய இந்த நான்கு பேரையும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர் இவர்கள் கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் பயணப் பைகளில் இருந்து, வெளிநாட்டு விமான நிலையங்களின் வரி இல்லாத வர்த்தக வளாகங்களில் (Duty-Free) கொள்வனவு செய்யப்பட்டிருந்த 378 மதுபான போத்தல்களும், 132 கிலோகிராம் ஏலக்காயும் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.துள்ளனர்.






3 Comments