Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க வேண்டும் ஜனாதிபதி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்கப்படுமென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 50வது குருத்துவப் பணி நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பல தசாப்த கால அர்ப்பணிப்பைப் ஜனாதிபதி பாராட்டினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பாடுபடுவதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

"அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது," என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். உரிய பொறிமுறையின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் உட்பட பல சர்வமதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...