இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் முன்னாள் வாகன சாரதியான 34 வயதுடைய அழகரட்ணம் யுவராஜ், நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை அம்பாறை, கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, செழியன் என அறியப்படும் யுவராஜ் 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் இனியபாரதியின் சாரதியாகச் செயல்பட்டவர் தற்போது இவர் பொத்துவில் – மட்டக்களப்பு வழித்தடப் பஸ் சாரதியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
பொத்துவிலில் இருந்து வழமைபோல் கல்முனை வழியாக மட்டக்களப்பிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, கல்முனைப் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இவரைக் கைது செய்து மேலதிக விசாரணைக்காக அம்பாறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.






3 Comments