Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 21 வயது மாணவர் 9 மாதங்களாக தடுத்துவைப்பு!

மொஹமட் ரிபாய் மொஹமட் சுஹைல் என்ற 21 வயது விமானக் கற்கைநெறி மாணவர், இஸ்ரேலியக் கொடியை மிதிக்கும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் ஒன்பது மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைல் முதலில் அக்டோபர் 2024-ல் தெகிவளைப் பொலிஸாரால் இஸ்ரேலியத் தூதரக வளாகத்திற்கு அருகில், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் கைது செய்யப்பட்டார் பின்னர் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் நீதிமன்றம் அவரைப் பிணையில்லாமல் விடுதலை செய்தபோதிலும் இன்ஸ்டாகிராம் காணொளி தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது வழக்கறிஞர் கருத்துப்படி இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் எந்தவொரு குற்றத்திற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு சுஹைலின் குடும்பத்தினர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர் எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி இவ்வளவு நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமை அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தகவல்களின்படி, இந்த வழக்கு இன்று (ஜூலை 9, புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...