2024 ம் ஆண்டுக்குக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருக்குமாயின் , பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கங்களான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
இந்த பேறுகள் அடிப்படையில் பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளனர். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இதன்படி மேல் மாகாணம் 74.47%,மத்திய மாகாணம் 73.91%, தெற்கு மாகாணம் 75.64%, வடக்கு மாகாணம் 69.86%. கிழக்கு மாகாணம் 74.26%, வடமேல் மாகாணம் 71.47%, வட மத்திய மாகாணம் 70.24%,ஊவா மாகாணம் 73.14% ,சப்ரகமுவ மாகாணம் Â 73.47% என Â மாகாண ரீதியான மாணவர் சித்தி சதவீதம் பதிவாகியுள்ளது ,
அதிகளாவனா சித்திவீதத்தை தென்மாகாணம் பதிவு செய்துள்ளது.






3 Comments