சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள்.
தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம்.
அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான். முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும்.
மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது . நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும்
குறிப்பாக ,வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.






3 Comments