இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு யானை இறப்புகளில் 17 சதவீதம் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க கூறியுள்ளார்.
இலங்கையில் நாட்டில் 20 சதவீத யானை இறப்புகள் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் ஏற்படுவதாகவும் இதுபோன்ற இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் ஏற்படுவதாகவும் அவர்
தெரிவித்தார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் விசாரணைகளில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
சட்டப்பூர்வ ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அரசு ஆய்வாளர் ரவைகள் மற்றும் ஆயுதங்களை மதிப்பிட்டு விசாரணைகளை எளிதாக்க முடியும் என கூறினார்.






3 Comments