பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை விமான நிலையங்கள் வழியாக அழைத்துச் செல்லும்போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கம் பதில் காவல்துறை அதிபருக்குப் பணித்துள்ளதோடு.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ள நிலையில்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத சாத்தியமான சிறப்பு வழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார் எனவும்.
சந்தேகிக்கப்படும் பாதாள உலக நபர்களை முகத்தை மூடிக்கொண்டு பொது பயணிகள் பயணிக்கக் கூடிய வழியில் அழைத்து வருவது மிகவும் பொருத்தமற்ற செயலாக உள்ளது எனவும்.
இது ஏனைய பயணிகளிடையே அமைதியின்மையை உருவாக்குகிறது மற்றும் விமான நிலையத்தின் பிம்பத்தை பாதிக்கிறது என்பதோடு.
அதேநேரம் குறித்த சந்தேகத்துக்குரியவர்களின் போட்டிக்குழுக்கள் அவர்களை இலக்கு வைப்பதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளத்தோடு.
இதுபோன்ற சம்பவங்கள் விமான நிலையத்திற்குள் நடந்தால் அது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மாத்திரமல்லாமல் விமான நிலையத்தின் நற்பெயரையும் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில்.
குறிப்பாக சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும்.
சந்தேக நபர்களைத் துணியால் முகத்தை மூடி பயணிகள் பகுதிகள் வழியாக நடக்க வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது இதுபோன்ற காட்சிகளைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.






3 Comments