இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் மொத்த செலவினங்களும் நிகர கடன்களும் 2179 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,619.2 பில்லியன் ரூபாயாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதார குறிகாட்டியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு.
மே 2025 இல் முடிவடைந்த ஐந்து மாதங்களில் அரச வருமானம் மற்றும் மானியங்கள் 1,942.4 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன எனவும்.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,619.2 பில்லியன் ரூபாயாக இருந்தது எனவும்.
மேலும் மே 2025 இல் முடிவடைந்த ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்த பாதீட்டுப் பற்றாக்குறை 236.6 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ள நிலையில்
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 366.8 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments