மீரிகம பகுதியைச் சேர்ந்த குழு ஓன்று சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து விதியின் கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் இவ்வாறு இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்கின்றனர்.
அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது .






3 Comments