பலாங்கொடை பகுதியில் Â லொரியின் Â சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் Â வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச் Â செலுத்தும் போது, வீட்டில் இருந்த ஒரு சிறுவன் லொரியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை, 1 வயது மற்றும் 7 மாத வயதுடையவர் என்பதுடன் Â பலாங்கொடையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் என தெரியவந்துள்ளது.
விபத்துக்கு காரணமான தந்தையை கைது செய்துள்ளனர்.






3 Comments