Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

புலமைப்பரிசில் விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே (A.K.S. Indika Kumari Liyanage) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன என்றும், பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை வினாத்தாள்கள், மற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை பின்வருமாறு, நேர அட்டவணை II, ஆம் வினாப்பத்திரம் - 09.30 - 10.45 மணி I ஆம் வினாப்பத்திரம் - 11.15 - 12.15 மணி மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்
இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரையில் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் www.doenets.lk இற்குப் பிரவேசித்து 'எமது சேவை' இன் கீழுள்ள Exam Information Centre' இன் மீது சொடுக்குவதன் மூலமோ அல்லது http://onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதன் மூலமோ அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அங்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் 2025 ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத்தருகின்றேன் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...