4 நாட்களுக்குள் 600 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் கூடுதலாக அதிகளவிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 இதன்படி, ஒரு நாளைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மில்லியன் ரூபா வருமானம் வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பண்டிகைக் காலத்தில் மிக அதிகளவிலான மக்கள் தங்களது கிராமங்களை நோக்கிச் செல்வதால் அதிக பேருந்துகளை கடமையில் ஈடுபடுத்த வேண்டிய நிலை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 கூடுதல் பேருந்துகளை இயக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் போக்குவரத்து சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.






3 Comments