வாகன இறக்குமதிக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என்றும் சந்தை திறந்தே இருக்கும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வீரசிங்க வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனது அறிவுக்கு எட்டிய வரையில் அரசாங்கமும் அவ்வாறான முடிவை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
நான் அறிந்தவரை அரசாங்கத்தால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை அமைச்சர் இது குறித்து உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிடுவார் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் பேரியல் பொருளாதாரம் முக்கிய பங்கை வகிப்பதாக குறிப்பிட்ட வீரசிங்க நிதி அமைப்பு ஸ்திரமாக இருப்பதை மத்திய வங்கி உறுதி செய்துள்ளதாகவும் கடன் வாங்குபவர்களின் இடர் இந்த நேரத்தில் பொருத்தமான முறையில் நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.






3 Comments