Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு.

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளதோடு.

நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை எனும் தொனிப்பொருளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...