புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க இன்னும் கால அவகாசம் உள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
குருணாகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர் இது ஒரு தற்காலிக திட்டம் அல்லவெனவும் மாறாக ஒரு நீண்டகால திட்டம் எனவும் கூறியுள்ளார்.
புதிய தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து சுய ஆய்வு மூலம் அறிவைப் பெறும் பொறுப்புள்ள குடிமகனை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்
புதிய கல்வி முறையின் கீழ் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அமைப்பு நடைமுறை உண்மை புரிதல் மற்றும் பாடங்களின் தெரிவு சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்தின் தனிப்பட்ட மதிப்பீடு தொழில்சார் பாடங்கள் என்பன தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும்.
புதிய கல்வி முறைமையை முதலில் 2026 ஆம் ஆண்டில், 1 ஆம் தரம் மற்றும் 6 தரத்துக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய சிறுவர்கள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியவர்கள். ஆசிரியர்கள் இதை அங்கீகரித்து சுய கற்றலுக்கு உகந்த சூழலை வழங்க வேண்டும்.
தெரிவு அடிப்படையிலான கற்றல் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் அறிவை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த மறுசீரமைப்பு முழுமையாக முடிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும் யோசனைகள் விவாதங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு படிப்படியாக செயல்படுத்தப்படும்.
அதற்கமைய பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமை, அறிவை மையமாகக் கொண்ட கல்வி முறைமையாக மாறப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.






3 Comments