மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு.
குறித்த சடலமானது நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் என பொலிஸார்
தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை களப்புக் கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் எனவும்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments