இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 76 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்நேற்று மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அங்கு 48 வயதான வர்த்தகர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்
காயமடைந்த அந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உடைகள் மற்றும் முகமூடிகள் என்பன யட்டியான பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






3 Comments