Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

விண்வௌியை சென்றடைந்த ப்ளூ ஒரிஜின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்!

இலங்கை நேரப்படி நேற்றிரவு(14) 07 மணிக்கு இந்த குழு விண்வௌிக்கான தமது பயணத்தை தொடர்ந்தனர்.

06 பேர் கொண்ட இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஒரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ரொக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

இந்தக் குழுவில் பொப் பாடகியான கெட்டி பெர்ரி, செய்தியாளர் கெய்ல் கிங், சிவில் உரிமைகள் சட்டத்தரணி அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ரொக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களுடன் சேர்ந்து ஆறாவது பெண்ணாக இந்தக் குழுவை வழிநடத்துபவரான ஜெஃப் பெசோஸின் காதலி லோரன் சான்செஸ் பயணித்துள்ளார்.

இந்த பயணமானது சுமார் 11 நிமிடங்கள் மாத்திரமே நீடித்துள்ளதாகவும் விண்வெளியில் இருந்து பூமியின் அழகிய காட்சியைக் கண்டுகளித்த பின்னர் அவர்கள் Â பூமிக்கு திரும்பியுள்ளனர்.

விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...